image

கிறிசென் சமூக சேவை அறக்கட்டளை

கைவிடப்பட்டோர் கரங்களை உயர்த்த

ஆன்மீக ஆர்வலர்களே, எளியோரிடம் பரிவுள்ளவர்களே, வணக்கம்.

கிறிஸ்துவின் சேனை இணயதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

இத்தளத்தின் நோக்கம் கத்தோலிக்க கிறிஸ்தவ மறையின் போதனைகள், மறை உண்மைகள், பாரம்பரியங்கள் அனைத்தையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், பிற கிறிஸ்தவர்களுக்கும், பிற மதத்தினருக்கும் எடுத்துரைக்கும் பணியை செய்வதும், மாற்றுத் திறனாளிகள், மற்றும் கைவிபட்பட்டோருக்கான சேவை பற்றித் தெரிவிப்பதுமாகும்.

1. கிறிஸ்துவின் சேனை பத்திரிக்கை:

கத்தோலிக்க விசுவாசத்தை இறைவார்த்தையின் அடிப்படையில் எடுத்துக் கூறும் கட்டுரைகளும், விவிலிய விளக்கங்களும், தமிழுக்காக, தமிழருக்காக என்ற இலக்கில் அரசியல் செய்திகளும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

2. கிறிசென் சமூக சேவை அறக்கட்டளை

மாற்றுத் திறனாளிகளோ, கைவிடப்பட்ட முதியோரோ காப்பகத்தில், எல்லா வசதிகளுடனும் தங்கியிருந்தாலும், தங்கள் சொந்த ஊரில், வீட்டில் சொந்த பந்தங்களோடு வாழ, பழக முடியவில்லையே என்ற மன அழுத்தத்துடன் காலத்தைக் கடத்துகின்றார்கள். என்னதான் காரணங்கள் இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளை, முதியவர்களை - அவர்களின் இறுதி மூச்சு வரை தங்கள் இல்லத்தில் அன்புடன் பராமரிக்கவேண்டிது அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் கடமையாகும். இதில் தவறுவது கடவுளின் கட்டளைகளுக்கு எதிரானது என்றே மறைநூல் சொல்லுகின்றது.

ஆகவே மாற்றுத்திறனாளின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர் அவரவர் பகுதியில் மாண்புடன் முன்னேற, மகிழ்வுடன் வாழ கிறிசென் அறக்கட்டளை, கல்வி, மருத்துவம், பொருளாதாரம், திருமணம், அடக்கம் போன்றதற்காக, எம் கிறிஸ்துவின் சேனை வாசகர்கள் மாதம் தோறும் வழங்கும் நன்கொடைகளை பகிர்ந்தளிக்கிறோம்.







image